குழந்தைகளின் மலத்தை சேமிக்கும் கனேடிய மருத்துவமனை: பின்னணியில் ஒரு ஆச்சரிய செய்தி
கனேடிய மருத்துவமனை ஒன்று, இரத்த வங்கி போல், குழந்தைகளின் மலத்தை சேமிக்கும் வங்கி ஒன்றைத் துவக்கியுள்ளது.
ஆச்சரிய பின்னணி
அபூர்வ மரபியல் பிரச்சினை ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை Kayleah Atkins. பேசவோ, நடக்கவோ முடியாத அந்தக் குழந்தைக்கு, Clostridium difficile அல்லது C. diff என அழைக்கப்படும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது.
இந்த பாக்டீரியா தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலை உருவாக்கும். ஆகவே, குழந்தை Kayleah அழுதுகொண்டே இருக்க, என்ன செய்வதென பெற்றோருக்குத் தெரியவில்லை.
Submitted by Hamilton Health Sciences
அப்போதுதான், ஹாமில்ட்டனில் அமைந்திருக்கும் McMaster குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல வயிறு சம்பந்தமான நோய்கள் நிபுணரான Dr. Nikhil Pai என்னும் மருத்துவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார் Kayleahவின் தாயாகிய Tanya Gillis.
குழந்தைகளின் மலத்தை சேமிக்கும் கனேடிய மருத்துவமனை
அந்த மருத்துவமனையில், குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு சிகிச்சை கிடைக்குமென கேள்விப்பட்ட Tanya, தன் மகளை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த மருத்துவமனையில், குழந்தைகளின் மலம் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பிரித்தெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
Submitted by Tanya Gillis
அந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்களை C. diff பாக்டீரியா தொற்று கொண்ட குழந்தைகளின் உடலுக்குள் செலுத்தும்போது, அவை குடலுக்குள் சென்று, நோயுண்டாக்கும் பாக்டீரியாவான C. diff பாக்டீரியாவை வெளியே தள்ளிவிட, அந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தை நலமடைந்துவிடும். இதுதான் அந்த சிகிச்சை முறை.
ஆக, Tanyaவின் மகளான Kayleahக்கு ஆசனவாய் வழியாக அந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செலுத்தப்பட்டுள்ளன.
Submitted by Hamilton Health Sciences
அந்த சிகிச்சைக்குப் பிறகு Kayleah ஒரு புதிய குழந்தையாகிவிட்டாள் என்கிறார் அவளது தாயாகிய Tanya.
தற்போது, பிரச்சினையுள்ள மற்ற பிள்ளைகளுக்கும் உதவி கிடைக்கும் வகையில், 5 முதல் 18 வயது வரையுள்ள ஆரோக்கியமான பிள்ளைகள் தங்கள் மலத்தை தானம் செய்யலாம் என McMaster மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது.
Submitted by Tanya Gillis
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |