கனேடிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய வெளிநாட்டவர்கள் சந்தித்த மோசமான அனுபவம்
கனேடிய நிறுவனம் ஒன்றில் வெளிநாட்டுப் பணியாளர்கள் சிலர் மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள்.
வெளிநாட்டு பணியாளர்களை மோசமாக நடத்துவோர் பதில் சொல்லியே தீரவேண்டும் என கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் கூறியுள்ளார்.
பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய வெளிநாட்டுப் பணியாளர்கள் சந்தித்த மோசமான அனுபவங்கள் தொடர்பில் வெளியான செய்திகள் கனடாவின் தற்காலிகப் பணியாளர் திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சரான Sean Fraser.
அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 22 தற்காலிகப் பணியாளர்களுக்கு தற்போது open work permits என்னும் பணி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த open work permit என்பது, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் தன்னை ஸ்பான்சர் செய்த பணி வழங்குவோர் தன்னைத் துன்புறுத்தும் நிலையில், அவரை விட்டு விட்டு வேறு இடத்துக்கு அல்லது வெறொருவரிடம் சென்று பணியாற்ற அனுமதிக்கும் பணி அனுமதியாகும்.
சமீபத்தில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள நிறுவனம் ஒன்றில் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின் கீழ் பணியாற்றிய வெளிநாட்டுப் பணியாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதைக் குறித்த தகவல்கள் வெளியாகி கனடா முழுவதும் கவனம் ஈர்த்தன.
image -CBC
அதைத் தொடர்ந்து அவர்களில் சிலரை சந்தித்துள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser. தற்போது, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 22 பேருக்கு open work permits என்னும் பணி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தைப் பயன்படுத்தும் பணி வழங்குவோர் பணியாளர்களை மோசமாக நடத்தினால், அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீரவேண்டும் என கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அந்த பணி வழங்குபவர் அந்த வெளிநாட்டுப் பணியாளர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தாத பட்சத்தில், அந்தப் பணியாளர்களுக்கு வேறொருவரிடம் பணி கிடைக்கச் செய்வதை நாம் உறுதி செய்தாகவேண்டும் என்று கூறியுள்ளார் Sean Fraser.
image -CBC
வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், கனடாவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை. ஆனால், இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின் கீழ் பணி செய்வோர் சிலர் தாங்கள் மோசமாக நடத்தபடுவதாக தெரிவித்துள்ளார்கள். சிலரோ, பயந்து உண்மையை வெளியே சொல்லாத நிலையும் காணப்படுகிறது.
இந்த நிலை மாறவேண்டும் என்று கூறியுள்ளார் Sean Fraser.
இந்நிலையில், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் அந்த பிரச்சினைக்குரிய நிறுவனத்தில் பணியாற்றிய Van மற்றும் Thi ஆகியோருக்கு தற்போது open work permits என்னும் பணி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
image -CBC
Van இப்போது உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வாழ்க்கை இப்போது கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளது என்கிறார் அவர்.
Thi என்ற பெண்மணியோ, இப்போது housekeeperஆக பணியாற்றி வருகிறார். என் வேலை கஷ்டம்தான், ஒரு நாளைக்கு 15 அறைகளை நான் சுத்தம் செய்யவேண்டும். ஆனால், சந்தோஷமான விடயம் என்னவென்றால் செய்த வேலைக்கு எனக்கு இப்போது ஒழுங்காக ஊதியம் கிடைக்கிறது. வாடகை கொடுக்க பணம் இருக்கிறது என்கிறார் அவர்.
இருவருமே இப்போது நிரந்தர குடியிருப்பு உரிமைக்கு விண்ணப்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள். என்றாலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பணியாற்றிய காலகட்டம் வீணாகிப்போனதே என்ற வருத்தம் உள்ளது அவர்களுக்கு!