கனேடிய பூர்வக்குடியினர் என்று பொய் சொல்லி ஏமாற்றிவந்ததாக பொது சுகாதார நிபுணர் மீது நடவடிக்கை
தன்னை கனேடிய பூர்வக்குடியின வம்சாவளியினர் என்று 20 வருடங்களாக கூறி, பூர்வக்குடியின பொது சுகாதார நிபுணராக பணியாற்றிவந்த ஒரு பெண் கூறியது உண்மையில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Morning Star Bear என்று அழைக்கப்படும் Carrie Bourassa என்ற பெண், Saskatchewan பலகலைக்கழகத்தில் பேராசிரியராகவும், Institute of Indigenous Peoples' Health for the Canadian Institutes of Health Research (CIHR) என்ற நிறுவனத்தில் அறிவியல் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
தான் Métis, Anishnaabe மற்றும் Tlingit பூர்வக்குடியின வம்சாவளியினர் என்று Carrie கூறிவந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடமிருந்தே அதற்கு மறுப்பு வந்துள்ளது.
அவரது குடும்பத்தின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Carrieயின் சகோதரியான Jody Burnett, அவரது கூற்று சரியானதல்ல என்று கூறியுள்ளார்.
அவர் உண்மையில், ரஷ்யா, போலந்து மற்றும் செக் நாட்டு வம்சாவளியினர் என ஆவணங்கள் கூறுவதாக Carrieயின் சகாக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கதையை திடீரென மாற்றிக்கூறிய Carrie, தனது தாத்தா இறந்ததும், அவரது நண்பரான Clifford Laroque என்ற பூர்வக்குடியினர், தன்னைத் தான் தனது 20 வயதுகளிலிருக்கும்போது தத்தெடுத்துக்கொண்டதால் தான் Métis பூர்வக்குடியினராக ஆகிவிட்டதாகவும் கூறத்தொடங்கினார்.
Carrie குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் கூறியபடி அவரது பூர்வக்குடியின வம்சாவளி குறித்த ஆதாரங்களும் எதுவும் கிடைக்காததால், அவர் பணி செய்த இரண்டு நிறுவனங்களும் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளன.