இரண்டுமுறை அமைதியாக இந்தியா சென்று திரும்பிய கனடா உளவுத்துறை தலைவர்
கனடாவின் உளவுத்துறை தலைவர், அமைதியாக இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு முறை இந்தியா சென்று திரும்பிய உளவுத்துறை தலைவர்
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை நடந்துவரும் நேரத்தில், அது தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக, கனடாவின் உளவுத்துறை தலைவர் இரண்டுமுறை இந்தியா சென்று திரும்பியுள்ளார்.
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதற்காக கனடா உளவுத்துறை தலைவரான David Vigneault, இந்தியா சென்று திரும்பியுள்ளார்.
அவர் பிப்ரவரி மாதத்தில் ஒருமுறையும், மார்ச் மாதத்தில் ஒருமுறையும் இந்தியா சென்று திரும்பியதாக தற்போது அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், கனடா உளவுத்துறை தலைவரான David Vigneault, இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியது அந்த நேரத்தில் யாருக்கும் தெரியாது. அவை குறித்து இந்திய ஊடகங்களிலோ, கனேடிய ஊடகங்களிலோ செய்திகள் வெளியாகவில்லை. அவ்வளவு அமைதியாக அவர் இந்தியா சென்று திரும்பியுள்ளார். உண்மையில் இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகள் இப்படித்தான் இருக்கும்.
ஆரம்பத்தில் நிஜ்ஜர் கொல்லப்பட்டபோது, அதுகுறித்து ட்ரூடோ வெளிப்படையாக பேசாமல் தூதர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலம் அந்த பிரச்சினை எதிர்கொள்ளப்பட்டிருக்குமானால், இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினைகள் இவ்வளவு பெரிதாகாமல், பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |