இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு
பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் ஒருவர், இந்தியர்களை கனடாவிற்குப் போக வேண்டாம் என கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
வாழ்க்கை தரம், தூய்மையான காற்று மற்றும் நிலையான வருமானம் என்பவைகளின் ஆசையில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கனடாவை நோக்கி குடிபெயர்கிறார்கள். ஆனால், கனடா வாழ்வு ஒரு கனவா அல்லது நிஜமா? என்ற கேள்வி எழுகிறது.
பெங்களூருவில் வசித்து வரும் கனேடிய பிரஜை கலேப் ஃப்ரீசன் (Caleb Friesen), 'Backstage with Millionaires' என்ற போட்காஸ்ட் தொகுப்பாளர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், "இந்தியர்கள் கனடாவிற்குப் போகவேண்டாம்" என்ற சர்ச்சையான கருத்தை பகிர்ந்துள்ளார்.
அவரது புகழ்பெற்ற வீடியோவில், கனடா குடியிருப்பு முறை ஒரு “மோசடி” என்றும், “பைரமிட் திட்டம்” போன்று செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பலர் இந்தியாவில் நன்றாகவே செழித்து வாழ்ந்தவர்களாக இருந்தும், கனடாவிற்குப் பிறகு வாழ்க்கை சுழல்நிலை அடைகிறது எனவும் கூறியுள்ளார்.
“மூன்று வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் 30-வயதில், கடனில் மூழ்கி, வீடு வாடகையில், ஒவ்வொரு ரூபாயையும் கணக்கிட்டு வாழ்கிறார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.
Canada is one of the most popular countries for Indians to relocate to, yet many of them discover too late that the grass was actually greener back home. pic.twitter.com/9R8dch4D9B
— Caleb (@caleb_friesen2) April 29, 2025
அவரது கருத்துகள் இணையத்தில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளன. சிலர் இவரை ஆதரிக்க, சிலர் இந்திய வாழ்க்கையின் சிக்கல்களை எடுத்துக்காட்டி எதிர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் கனடா குடியிருப்பின் பிரபலமான ‘Express Enty’ திட்டத்தின் பின்னாலுள்ள சிக்கல்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கனடா செல்ல முனைந்தவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |