கனேடியரால் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர்: குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் சிறை
கனடாவில் பிரப்ஜோட் சிங் காட்ரி என்ற சீக்கிய இளைஞர் கனேடியரால் கொலை, செய்த குற்றத்திற்காக அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்தி கொலை
கனடாவின் நோவா ஸ்காட்டியோ மாகாணத்தில் வாழ்ந்து வந்த பிரப்ஜோட் சிங் காட்ரி(23) என்ற சீக்கிய இளைஞர், கடந்த 2021ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
@GoFundMe
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனேடியரான கேமரூன் ஜேம்ஸ்(21) என்பவருக்கும், பிரப்ஜோட்க்கும் இடையே அடுக்குமாடிக்குடியிருப்புக்கு வெளியே சண்டை வந்துள்ளது.
இந்த சண்டையில் கேமரூன், பிரப்ஜோட்டை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பொலிஸார் குற்றவாளியை கைது செய்தனர்.
9 ஆண்டுகள் சிறை
இந்நிலையில் முதல் கட்டமாக கேமரூனுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு குறைந்தபட்ச சிறைத் தண்டனை அளித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.
இந்திய வம்சாவளி இளைஞரான பிரப்ஜோட் ஒரு தனியார் டாக்சி சர்வீஸ் கம்பேனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து விட்டு இந்த தொழிலுக்கு வந்துள்ளார்.
@globalnews
இந்த நிலையில் தனது நண்பரது அப்பார்ட்மெண்டுக்கு சென்று விட்டு, வெளியே வந்த அவரை கேமரூன் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தண்டனை போதாது
கடந்த சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த கொலை வழக்கில், பேசிய கேமரூன் ”நான் இறந்தவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு குறைந்தபட்ச தண்டனை அளித்தால் என்னால் திருந்தி வாழ முடியும்” என நீதி மன்றத்தில் கூறியுள்ளார்.
@globalnews
பின்னர் நீதிபதி அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து பிரப்ஜோட்க்கின் தங்கையிடம் தண்டனை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட போது
”ஒருவரது உயிரிழப்பிற்குத் தண்டனையாக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை போதாது. இது கனடாவில் இந்தியர்களுக்காக பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.