தோழிகளுக்கு போதைப்பொருள் வாங்கிக்கொடுத்த கனேடிய மருத்துவ மாணவர்... ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
கனேடிய மருத்துவ மாணவர் ஒருவர் அமெரிக்காவுக்குள் நுழைந்த நிலையில், அமெரிக்க கனேடிய எல்லையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தனது கல்வியின் ஒரு பகுதியாக அமெரிக்காவுக்குச் சென்ற Saad Jalal (28) என்ற அந்த மாணவருக்கு மூன்று பெண் தோழிகள் அறிமுகமாகியுள்ளார்கள்.
அவர்கள் அவரிடம் குறிப்பிட்ட போதைப்பொருள் வேண்டும் என்று கேட்க, அவரும் அந்த இளம்பெண்களுக்கு போதைப்பொருள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ஆனால், அந்த போதைப்பொருளை அருந்திய Alexandra Maller (22) என்ற பெண்ணுக்கு அந்த பொருள் ஓவர் டோஸாகிவிட்டதால், அவர் சுருண்டு விழுந்திருக்கிறார். மருத்துவர் பயிற்சி பெறும் Jalal அவருக்கு முதலுதவி கொடுக்க முயல, மற்றொரு பெண் அவசர உதவியை அழைக்க, ஆனால், யாராலும் Alexandraவைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த வழக்கு தொடர்பாகத்தான் Jalal கைது செய்யப்பட்டுள்ளார்.
Jalal போதைப்பொருள் கடத்துபாவரோ, விற்பவரோ அல்லது வழக்கமாக போதைப்பொருள் உட்கொள்பவரோ அல்ல என்பது உண்மைதான் என்று கூறிய நீதிபதி, மருத்துவக் கல்வி பயில்பவராக இருந்த அவர் அதன் அபாயம் குறித்து அறிந்திருந்திருக்கவேண்டும் என்றார்.
அமெரிக்கச் சட்டப்படி Jalalக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், அவர் மருத்துவத்துக்காகவே தன் நேரம், பணம் என அழைத்தையும் அர்ப்பணித்திருந்ததாகவும், இப்போது எல்லாமே போய்விட்டதாகவும், அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்குப்பின், அவருக்கு ஒரு ஆண்டும் ஒரு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் கனேடியர் என்பதால், பின்னர் அவர் கனடாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
மனித உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணிக்காக அர்ப்பணித்த ஒருவர், பைத்தியக்காரத்தனமாக ஒரு நாள் எடுத்த தவறான முடிவு, அவரது வாழ்க்கையையும், அவரது தோழியின் வாழ்க்கையையும் நாசம் செய்துவிட்டது போதையின் பக்கம் போக விரும்பும் மற்றவர்களுக்கு ஒரு பாடம்தான்...