நமது நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் சிக்கலானவை! கொரிய ஜனாதிபதியை குறிப்பிட்ட கனேடிய வெளிவிவகார அமைச்சர்
கனடா மற்றும் தென் கொரியா கடந்த 60 ஆண்டுகளாக ஒன்றாக வலுவாக இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி பதிவிட்டுள்ளார்.
தென் கொரிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி சியோலில் கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாட்டின் அமைச்சர்களும் உறுதிப்படுத்தினர்.
மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.
மெலனி ஜோலியின் பதிவு
இந்த நிலையில் மெலனி ஜோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நமது நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் பெருகிய முறையில் அடிக்கடி மற்றும் சிக்கலானவை.
ஆனால் கனடாவும், தென்கொரியாவும் கடந்த 60 ஆண்டுகளாக ஒன்றாக வலுவாக நிற்கின்றன. அடுத்த தசாப்தங்களுக்கு அந்த நட்பைத் தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம்' என தெரிவித்துள்ளார்.
It was an honour to meet with @President_KR.
— Mélanie Joly (@melaniejoly) April 15, 2023
The challenges our countries face are increasingly frequent and complex. But Canada and South Korea have stood strong together for the past 60 years and we look forward to continuing that friendship for the next decades to come. pic.twitter.com/hUASHZ6hrU