கனடாவில் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்த ஆண் எம்.பிக்கள்
தினமும் வித்தியாச வித்தியாசமான சம்பவங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில விடயங்கள் நம்மை சிரிக்க வைத்தாலும் அதில் ஒளிந்திருக்கும் ஆழமான கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது.
ஆம், கனடா நாடாளுமன்ற எம்.பிக்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவ்வாறு அவர்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்ததற்கான காரணமானது, கனடா நாட்டைச் சேர்ந்த பெண்களின் தங்குமிட நிதியை திரட்டுதல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை குறித்து ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 4 வருடங்களாக Hope in High Heels பிரசாரம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதனால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இவ்வாறு ஆண் எம்.பிக்கள் பிங்க் நிறத்தில் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.