கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்த அதிகார துஷ்பிரயோகம்: வெளியாகும் உண்மைகள்

India Canada S. Shankar
By Balamanuvelan Oct 24, 2023 06:00 AM GMT
Report

கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுள்ள உண்மைகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

41 அதிகாரிகள் வெளியேற்றம் 

கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியதன் பேரில், இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது கனடா.

கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்த அதிகார துஷ்பிரயோகம்: வெளியாகும் உண்மைகள் | Canadian Misusing Powers To Give Visa Khalistan

Outlook India

தொடர்ச்சியாக கனேடிய தூதரக அதிகாரிகள் இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பில் கவலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, அவர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிவித்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர், வியன்னா ஒப்பந்தத்திற்குட்பட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுள்ள உண்மைகள்

இந்நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் வெளியாகியுள்ளது.

அதாவது, சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு துணை தூதரகங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள கனேடிய தூதர்கள், தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, காலிஸ்தான் ஆதரவாளர்களாக அறியப்பட்ட குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு விசா வழங்குகிறார்கள் என இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரத்திலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்த அதிகார துஷ்பிரயோகம்: வெளியாகும் உண்மைகள் | Canadian Misusing Powers To Give Visa Khalistan

The Economic Times

கனேடிய தூதரக அதிகாரிகள் இதை வேண்டுமென்றே செய்துள்ளார்கள். அதற்குக் காரணம், குறிப்பிட்ட நபர்களை இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல விசா வழங்குவதுதான் என்று கூறும் அதிகாரிகள், வழக்குகளில் சிக்கியவர்களுக்கு கூட இந்த தூதரக அதிகாரிகளால் விசா வழங்கப்பட்டு, அவர்கள் கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள்.

மேலும், சில சந்தர்ப்பங்களில், சிலரை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கும், கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை விசாரிப்பதற்கும் ஒத்துழைக்க கனடா மறுத்துள்ளது.

கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்த அதிகார துஷ்பிரயோகம்: வெளியாகும் உண்மைகள் | Canadian Misusing Powers To Give Visa Khalistan

அத்துடன், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கனடா ஆதரவு அளித்ததற்கான ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, இவ்வளவு காரணங்கள் இருப்பதாலேயே இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க, இந்திய அரசு முடிவு செய்ததாக தற்போது அரசு அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US