பார்வையற்ற இளைஞர் கருணைக்கொலை: கனேடிய மருத்துவர் மீது கோபத்தில் குடும்பத்தினர்
நீரிழிவால் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞரை கருணைக்கொலை செய்ததால், கனேடிய மருத்துவர் மீது குடும்பத்தினர் மிகுந்த கோபத்திலும், துயரத்திலும் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மகன்
கனடாவைச் சேர்ந்த மார்கரெட் மார்சிலா என்பவரின் 26 வயது மகன் கியானோ வஃபேய்ன். இவர் 2022ஆம் ஆண்டில் கண்பார்வையையும் இழந்திருந்தார்.
@Margaret Marsilla/Instagram
அத்துடன் மனநலப் பிரச்சனைகளாலும் கியானோ அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த டிசம்பர் 30ஆம் திகதி அன்று, கனேடிய சட்டத்தின் கீழ் வஃபேய்னுக்கு மருத்துவரின் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருணைக்கொலையாக உயிரை மாய்த்துக்கொண்டார். இது அவரது குடும்பத்தை மிகுந்த மனவேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கருணைக் கொலைக்கான அவரது கோரிக்கையை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
மார்கரெட் தனது பேஸ்புக் பக்கத்தில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒன்ராறியோவில் நாங்கள் அவரது கருணைக் கொலையைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு சில உதவிகளைப் பெற்றுத் தர முடிந்தது" என்று எழுதினார்.
Facebook
கருணைக்கொலை
மேலும், தனது மகன் எந்தவொரு குணப்படுத்த முடியாத நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் மருத்துவரின் உதவியுடன் நிகழ்ந்த தனது மகனின் மரணம் 'ஒவ்வொரு நிலையிலும் அருவருப்பானது' என்றும் வர்ணித்தார்.
கருணைக்கொலை நடைமுறையை மேற்கொண்டவர் மருத்துவர் எலன் வீபே ஆவார். இவர் தனது மருத்துவப் பணியில் பாதியை மருத்துவ உதவியுடன் கூடிய மரணத்திற்கு பங்களித்துள்ளார்.
வஃபேய்னின் இறப்புச் சான்றிதழில், அவரது மருத்துவ உதவியுடன் கூடிய இறப்புக்கு காரணமான 'முந்தைய காரணங்கள்' என்று பார்வையற்ற தன்மை, கடுமையான புற நரம்பியல் பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
Dying with Dignity
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |