கனடாவில் லொட்டரியில் 1,000 கோடி வென்ற நபர்: பணத்தை என்ன செய்யப்போகிறாராம் தெரியுமா?
கனடாவில் லொட்டரியில் சுமார் 1,000 கோடி வென்ற ஒருவர், தன் பணம் முழுவதையும் தன் அன்பிற்குரியவர்களுக்காக செலவிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் கோடீஸ்வரரான கனேடியரின் திட்டம்
கனடாவின் மனித்தோபாவிலுள்ள Whitemouthஇல் வாழும் எர்ல் (Earl Giesbrecht) லொட்டரி வாங்குவதை வழக்கமாகக் கொண்டவர் ஆவார்.
இதுவரை அதிகபட்சமாக 1,200 டொலர்கள் மட்டுமே பரிசு வென்றவரான எர்லுக்கு இம்முறை 46 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

46 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 11,18,81,76,327.00 ரூபாய் ஆகும்.
தான் லொட்டரியில் வென்ற பணத்தை தன் அன்பிற்குரியவர்களுக்காக செலவிட திட்டம் வைத்துள்ளதாகக் கூறும் எர்ல், தன் பிள்ளைகள், மருமக்களுக்கு என்னென்ன கார் வாங்க ஆசையோ, அதையெல்லாம் வாங்கிக் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன் பேரப்பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள் என அடுத்தடுத்து வரும் தன் சந்ததியினரை தன் பணம் சென்றடையவேண்டும் என்பது எர்லின் விருப்பம்.
அத்துடன், தன் ஊரிலுள்ள தீயணைப்புத்துறையினருக்கு ஒரு தண்ணீர் டேங்க் தேவைப்படுவதால், அதற்காக அவர்கள் சேர்த்துவைத்துள்ள பணம் போக, மீதி எவ்வளவு பணம் தேவையோ அதைக் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் எர்ல்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |