இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர்: விவரங்கள்
கனடா பிரதமர், அடுத்த மாதம், அதாவது, மார்ச் மாதம் இந்தியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம்
கனடா பிரதமரான மார்க் கார்னி, மார்ச் மாதம் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் இந்தியா செல்ல இருக்கிறார்.

இரண்டு நாட்களை டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் செலவிட இருக்கும் கார்னி, பாதுகாப்பு, வர்த்தகம், ஆற்றல், வேளாண்மை முதலான பல்வேறு துறைகள் தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளார்.
மார்க் கார்னியுடன், அவரது மனைவியான டயானா ஃபாக்ஸ் கார்னி, வெளியுறவு அமைச்சரான அனிதா ஆனந்த், நிதி அமைச்சரான ஃப்ராங்கோயிஸ் பிலிப் ஷேம்பெய்ன் முதலான பல கேபினட் அமைச்சர்களும் இந்தியா செல்ல உள்ளார்கள்.
2018ஆம் ஆண்டு, அப்போதைய கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசு முறைப்பயணம் பெரும் சர்ச்சையில் முடிந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் கனேடிய பிரதமர் ஒருவர் இந்தியா செல்வது இதுவே முதன்முறையாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |