50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமல்! தந்தை பாணியில் பிரதமர் அதிரடி
கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக டிரக் சாரதிகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு பின்னர் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரக் சாரதிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாரதிகள் போராட்டத்தை தொடங்கினர்.
மிக முக்கியமாக கனடாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் Ambassador Bridgeல் நடந்த போராட்டத்தால் மில்லியன் டொலர் கணக்கில் இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நீதிபதி அளித்த உத்தரவின் பேரில், போராட்டக்காரர்களை போலீசார் அகற்றினர், இருநாடுகளுக்கும் போக்குவரத்தும் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிறப்பித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அதாவது, 1970-ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது, போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.