எலி தொல்லையால் மூடப்பட்ட கனேடிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம்! பழுதுபார்க்கும் செலவு குறித்து வெளியான அறிக்கை
எலி செத்த நாற்றம் உட்பட பல காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் கனேடிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பழுதுபார்ப்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மூடப்பட வேண்டிய கட்டாயம்
கொறித்துண்ணிகள், குறிப்பாக செத்த எலிகள், வளாகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், 2022-ல் கனடிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த இல்லம் 2015 முதல் காலியாக உள்ளது. இதனை மறுசீரமைக்கும் வேலை என்பது மலிவான காரியமாக இருக்காது என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Canada Today
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பிரித்தானியாவின் 10, டவுனிங் தெரு, உள்ளிட்ட உலகின் சில முக்கிய சொத்துக்களில் அரசியல் தலைவர்கள் வசிக்கிறார்கள் என்ற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, 24 சசெக்ஸ் டிரைவில் (24 Sussex Drive) அமைந்துள்ள கனேடிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் தலைவிதி கொறித்துண்ணிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக கனேடிய பிரதம மந்திரிகளுக்கு சொந்தமானது
இந்த வளாகம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவின் பிரதம மந்திரிகளுக்கு சொந்தமானது. ஜான் எஃப் கென்னடி, இளவரசி டயானா, மிகைல் கோர்பச்சேவ் போன்ற ஆளுமைகளை வரவேற்றுள்ளது. ஆனால், தற்போது வீட்டின் உள் சுவர்களில் எலிகள் இறந்த நிலையில் காலியாக உள்ளது.
ஏற்கெனவே ஆபத்தான இந்த கட்டிடத்தில் எலிகள் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய அரசாங்கம் அதன் அறிக்கையில் தெரிவித்திட்டுள்ளது.
Official residence of Canadian prime minister 24 Sussex Drive, Ottawa, Ontario. (Image: pc.gc.ca)
இந்த சொத்தை நிர்வகிக்கும் கனடாவின் ஃபெடரல் ஏஜென்சி, நேஷனல் கேபிட்டல் கமிஷன் (NCC ) படி, பிரதம மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்தின் நிலை காற்றில் பறக்கிறது, அங்கிருக்கும் தண்ணீர் குழாய்கள் துருப்பிடித்துள்ளன, மின்சார வயரிங் பழமையானது மற்றும் மற்றும் மொத்த இடமும் பேரழிவை நெருங்குகிறது என்றும் மேலும் வீட்டில் சென்ட்ரல் ஏர் கண்டிஷனிங் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
சீரமைக்க எவ்வளவு செலவாகும்?
இந்த இல்லத்தை சரிசெய்வதற்கான மதிப்பிடப்பட்ட செலவு தற்போது 36 மில்லியன் கனேடிய டொலருக்கும் அதிகமாக உள்ளது.
National Capital Commission/Flickr
சமீபத்திய பிரச்சினை என்னவென்றால், எலிகள் தான், எலிகள் சுவர்களுக்கு இடையில் மற்றும் மாடி மற்றும் அடித்தள இடைவெளிகளில் செத்துக்கிடக்கின்றன, மேலும் வீடு முழுக்க எலியின் மலங்கள் தான் இருக்கின்றன என்று NCC தெரிவித்துள்ளது. கனடிய அரசாங்க சொத்துக்களை மூட உத்தரவிடும் அதிகாரமும் இந்த NCC-க்கு உள்ளது.
தீங்கிழைக்கும் கல்நார் கொண்ட வீட்டின் உட்புற சுவர் மற்றும் சுவாசிக்கமுடியாத அளவிற்கு மாறிய காற்றின் தரம் காரணமாக வீட்டின் நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.