கனடாவில் சூப்பர்-லேப் போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: இந்திய வம்சாவளி நபர் கைது!
கனடாவில் ரூ.3000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தொழிற்சாலையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ரூ.3000 கோடி சூப்பர்-லேப் தொழிற்சாலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பால்க்லாந்து(Falkland) பகுதியில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயாரிப்பு சூப்பர்-லேப் தொழிற்சாலை கனடா காவல்துறையினர் கண்டுபிடித்து மூடியுள்ளனர்.
சுமார் ரூ.3000 கோடி($485 million) மதிப்புள்ள இந்த தொழிற்சாலையை சர்வதேச குற்ற பின்னணி கொண்ட குழுவினரால் நடத்தப்பட்டு வந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குழு பெண்டானில்(fentanyl) மற்றும் மெத்தம்பேட்டமைன்(methamphetamine) போன்ற போதை மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
உற்பத்தி தொழிற்சாலையை கண்டறிந்த பொலிஸார், அங்கிருந்து 54 கிலோ பெண்டானில், 390 கிலோ மெத்தம்பேட்டமைன், 35 கிலோ கோகைன்(cocaine) 6 கிலோ கஞ்சா(cannabis) மற்றும் அதிக அளவிலான வேதிப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இவற்றுடன் கைத்துப்பாக்கிகள், submachine துப்பாக்கிகள் உட்பட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள், வெடி மருந்துகள், கவச உடைகள் மற்றும் $500,000 பணம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய வம்சாவளி நபர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்தியாவின் பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த ககன்ப்ரீத் ரந்தாவா(Gaganpreet Randhawa) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும், அவரது பஞ்சாப் முகவரி குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ராயல் கனேடியன் மவுண்ட் பொலிஸின்(RCMP) உதவி ஆணையர் டேவிட் டெபுல், கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருள்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச ஏற்றுமதிக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |