தன் நாட்டு அதிகாரிகளையே கடுமையாக விமர்சித்துள்ள கனடா பிரதமர்: பின்னணி
கனேடியர் ஒருவருடைய கொலையுடன் இந்திய பிரதமரை இணைத்து தகவல் கொடுத்த அதிகாரிகளை கனடா பிரதமர் கடுமையாக சாடியுள்ளார்.
அந்தர் பல்டி அடித்த கனடா
காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கிடையிலான தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 20ஆம் திகதி, கனடாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் Globe and Mail பத்திரிகை, ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை தொடர்புபடுத்தி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஆனால், பின்னர் அந்த செய்திக்கு கனடா தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெற்ற குற்றச்செயல்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கோ தொடர்பு இருப்பதாக கனடா அரசு தெரிவிக்கவும் இல்லை, அதற்கான ஆதாரம் இருப்பதாக கனடா அரசுக்கு தெரியவும் தெரியாது என கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகரான Nathalie G Drouin என்பவர் தெரிவித்துள்ளார்.
தன் அதிகாரிகளையே கடுமையாக விமர்சித்துள்ள கனடா பிரதமர்
இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையுடன் இந்திய பிரதமரை இணைத்து தகவல் கொடுத்த தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக சாடியுள்ளார்.
உச்ச கட்ட ரகசிய தகவல்களை ஊடகங்களுக்கு லீக் செய்த அதிகாரிகளை கிரிமினல்கள் என விமர்சித்துள்ள ட்ரூடோ, தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து தவறான செய்திகளை கொடுத்துவந்ததாகவும் சாடியுள்ளார்.
அதனால்தான் தாம் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பில் தேசிய அளவிலான விசாரணை ஒன்றை மேற்கொண்டதாகவும், அதிலிருந்து இந்த கிரிமினல்களான அதிகாரிகள் முக்கிய தகவல்களை ஊடகங்களுக்கு லீக் செய்ததும், அவை நம்பத்தகாத செய்திகளாக உள்ளது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரூடோ.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |