கனேடிய மாகாணமொன்றிற்கு இந்த பணி செய்வோர் தேவை: அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மருத்துவர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளன.
குடும்ப நல மருத்துவர்கள் கிடைக்காததால் அவதியுறும் மக்கள்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மருத்துவர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து, கூடுதல் மருத்துவர்களைக் கொண்டுவருவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அம்மாகாணம்.
மாகாண பிரீமியரான David Eby, Practice Ready Assessment program என்னும் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படும் மருத்துவர்களின் இருக்கைகளின் எண்ணிக்கையை 32இலிருந்து மூன்று மடங்கு உயர்த்தி 96ஆக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டம், வெளிநாடுகளில் படித்த குடும்ப நல மருத்துவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவப் பணியாற்ற உரிமம் பெற அனுமதியளிக்கிறது.
Darryl Dyck/The Canadian Press
கோவிட் காலகட்டம் உருவாக்கிய சவால்கள்
கோவிட் காலகட்டம் மருத்துவத்துறையில் பெரும் சவால்களை உருவாக்கியதாகவும், கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியதாகவும் தெரிவிக்கும் மாகாண பிரீமியரான David Eby, பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் பலர் குடும்ப நல மருத்துவர்கள் கிடைக்காமல் அவதியுற்றுவருவதாக தெரிவிக்கிறார்.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உரிமம் பெற தகுதி பெறாத சர்வதேச மருத்துவ பட்டதாரிகள், இனி துணை மருத்துவர் என்னும் புதிய பிரிவின் கீழ் பதிவுசெய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த துணை மருத்துவர்கள், ஒரு மருத்துவரின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் மட்டும் ஒரு மருத்துவ அமைப்பிற்குள் நோயாளிகளை கவனிக்கலாம்.
இந்த விதிகள், அடுத்த ஜனவரி வாக்கில் மேற்குறிப்பிட்ட மருத்துவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி செய்யத் துவங்கும் வகையில், வரும் வாரங்களில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.