கனேடிய மாகாணமொன்றில் மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கை: பின்னணி
காட்டுத்தீ காரணமாக கடும் புகை உருவாகியுள்ளதால், ஆல்பர்ட்டா மாகாண மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு கனடா சுற்றுச்சூழல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இரண்டு நகரங்களில் மோசமான நிலை
கால்கரி மற்றும் எட்மண்டன் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், அதனால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு பெரும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
எச்சரிக்கை
மக்கள் ஏசி முதலான காற்றை சுத்திகரிக்கும் கருவிகளை இயக்கியபடி, கூடுமானவரையில் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Air quality continues to deteriorate in CRAZ, we’ve now started to record ground-level ozone exceedances in addition to PM2.5
— CRAZ (@CalgaryAirshed) May 21, 2023
Ozone is a secondary pollutant that is formed via a chemical reaction between the oxides of nitrogen & volatile organic compounds, in the presence of sun pic.twitter.com/JB7ZSBeKIv
உங்களுக்கு ஏசி முதலான வசதிகள் இல்லையென்றால், நூலகம் அல்லது ஷாப்பிங் மால் போன்ற கட்டிடங்களுக்கு செல்வது நல்லது என்றும் கூறியுள்ளார்கள் அதிகாரிகள்.