உடல் முழுவதும் டாட்டூக்கள்..கின்னஸ் சாதனை படைத்த கனேடியர்
Canadian remy holds unique tattoo world record: முகத்தைத் தவிர உடல் முழுவதும் டாட்டூ போட்டுக்கொண்ட கனேடியர் கின்னஸ் சாதனை படைத்தார்.
கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் டாட்டூக்கள் போட்டுக்கொண்டதற்காக கின்னஸ் சாதனை படைத்தார்.
உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான
கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 38 வயது நபர் ஜெர்மி 'ரெமி' ஸ்கோஃபீல்ட். இவர் தனது உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் டாட்டூக்கள் போட்டுக்கொண்டார்.
முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதும் மைகளால் மூடிக்கொண்ட ஜெர்மி, 2005ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக இதனை செய்து வந்துள்ளார். இதன் விளைவாக அவரது தோலில் சுமார் 40 அடுக்குகள் வரையிலான மை படிந்துள்ளது.
ஜெர்மியின் உடலின் சில பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட முறைகள் கூட டாட்டூக்கள் குத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் உலகில் அதிக அடுக்கு டாட்டூக்கள் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை பட்டத்தை ஜெர்மி வென்றார்.
கின்னஸ் உலக சாதனைகள் 2027-யில் இடம்பெற்றுள்ள ரெமி, ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட பியர்சிங்குகளுடன் உடல் மாற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், தனது உடல் முழுவதும் டாட்டூக்களால் நிரப்ப முதலில் திட்டமிடவில்லை என்கிறார் ஜெர்மி.

