மான்களிடமிருந்து மனிதனுக்குப் பரவும் கொரோனா தொற்று! கனேடிய ஆய்வாளர்கள் அதிர்ச்சி
மான்களிடமிருந்து மனிதனுக்கு கொரோனா தொற்று பரவுவதை, முதன்முறையாக கனேடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
பொதுவாக மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவது அபூர்வமான விடயமாகும்.
ஆனால், உலகிலேயே முதன்முறையாக மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவலாம் என கனேடிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இதுவரை, மனிதர்களிடமிருந்து மான்களுக்கு கொரோனா தொற்று பரவுவதையும், மான்களிடமிருந்து மான்களுக்கு கொரோனா பரவுவதையும்தான் ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள். இந்நிலையில், இப்போதுதான், மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு, தென்மேற்கு ஒன்ராறியோவில் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மான்களை அறிவியலாளர்கள் குழு ஒன்று ஆராய்ந்தது.
We recently found highly divergent SARS-CoV-2 genomes from deer with potential deer-to-human transmission via wildlife surveillance involving @InspectionCan, @onresources, @PublicHealthON, and @DalhousieU @Sunnybrook @uOttawa @WesternU (& many others!)https://t.co/iePRue7BCy /1
— Finlay Maguire (@FinlayM) February 26, 2022
அந்த ஆய்வில், அந்த மான்களில் கொரோனா வைரஸ் ஒன்று பரவியிருப்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். அதே நேரத்தில், அதே பகுதியில் வாழும் ஒருவரிடம் அதே வகை கொரோனா வைரஸ் இருப்பது இருந்ததும், அவர் அந்த மான்களைக் கையாண்டதும் தெரியவந்தது. ஆக, அந்த மான்களிடமிருந்து அவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இது ஒரு ஆரம்ப கட்ட ஆய்வுதான், இருந்தாலும், மான் வேட்டைக்குச் செல்வோர், தங்கள் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுமாறும், கையுறைகள், கண்களை பாதுகாக்கும் பெரிய கண்ணாடிகள் மற்றும் மாஸ்க் அணிந்து மான் இறைச்சியைக் கையாளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்னொரு விடயம் என்னவென்றால், கொரோனா வைரஸ்கள், சாதாரணமாக சமைக்கும் வெப்பநிலையிலேயே கொல்லப்பட்டுவிடும்.
அத்துடன், சமைத்தபின் அந்த உணவிலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.