4 வார விண்வெளி சுற்றுலா.. வெற்றிகரமாக கடலில் தரையிறங்கிய கனேடியர்! வீடியோ
கனேடிய தொழிலதிபர் Mark Pathy விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்த நிலையில் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தார்.
விண்வெளி வீரரான Michael López-Alegría-வின் வழிகாட்டுதலின்படி அமெரிக்க தொழிலதிபர் Larry Connor, இஸ்ரேல் தொழிலதிபர் Eytan Stibbe ஆகியோருடன் கனேடிய தொழிலதிபர் Mark Pathy, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தின் உதவியுடன் விண்வெளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
நான்கு வாரங்கள் விண்வெளி சுற்றுப்பயணம் செய்த அவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சக பயணிகளுடன் பூமிக்கு புறப்பட்டார். அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அவர்களது விண்கலம் வந்து இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது மிகவும் ஆபத்தான தரையிறக்கமாக கருதப்பட்டது.
SpaceX all-private mission splashes down after week-long delays pic.twitter.com/F9alm2EFKU
— RT (@RT_com) April 26, 2022
Mark Pathy தனது குழுவுடன் பயணித்த டிராகன் காப்சூல் எனும் விண்கலமானது, ஒரு மணிநேரத்திற்கு 17,000 மைல்கள் என்ற வேகத்தில் பயணித்தது. அப்போது விண்கலத்தின் வெளிப்புற வெப்பம் சுமார் 3,500 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பமடைந்து. எனினும் வெற்றிகரமாக அட்லாண்டிக் பெருங்கடலில் பாராசூட் வாயிலாக பயணிகள் தரையிறங்கியனர்.
அப்போது ஏற்கனவே அங்கு தயாராக இருந்த மீட்புக்குழு அவர்களை பத்திரமாக மீட்டது. இந்த விண்வெளி சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு பணிக்கும், விண்வெளி வீரர்களிடமிருந்து தேவையான ஆதரவைக் கொண்டுவருவதற்கு வணிக வாடிக்கையாளர்களுக்கு 5.2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும், மேலும் தாங்கள் வழங்கும் அனைத்து பணி ஆதரவு மற்றும் திட்டமிடலுக்கு 4.8 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
மேலும், விண்வெளியில் இருக்கும்போது, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு உணவுக்கு மட்டும் 2,000 டொலர்கள் செலவாகும் என்றும், ஒரு வணிகக் குழுவிற்கு விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 88,000 டொலர்கள் முதல் 164,000 டொலர்கள் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.