ஸ்கை டைவிங் விளையாட்டில் கனேடிய அழகி மரணம்; சரியான நேரத்தில் பாராசூட் திறக்காததால் நடந்த சோகம்
21 வயதான கனேடிய அழகி ஸ்கைடைவிங் விபத்தில் மரணமடைந்தார்.
சரியான நேரத்தில் பாராசூட் திறக்கப்படாததால் நேரடியாக தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கனடாவில் 21 வயது இளம் பெண் ஸ்கை டைவிங் விளையாட்டின்போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 27-ஆம் திகதி நடந்தது.
கனடாவில் மிகவும் பிரபலமான டிக் டோக்கர் என்று கூறப்படும் Tanya Pardazi, மிஸ் கனடா அரையிறுதிப் போட்டியாளர் ஆவார். மேலும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
சம்பவத்தன்று, தான்யா பர்தாசி தனது முதல் சோலோ ஜம்ப்பைச் செய்து கொண்டிருந்தபோது இந்த சோகமான முடிவைச் சந்திக்க நேர்ந்தது, அவரால் சரியான நேரத்தில் பாராசூட்டை திறக்க முடியாததால் நேராக தரையில் விழுந்தார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தத்துவ துறை மாணவியான தான்யா பர்தாசி, கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இன்னிஸ்ஃபில் நகரத்தில் உள்ள Skydive Toronto-வில் ஸ்கை டைவிங் செய்தார்.
ட்விட்டரில் Skydive Toronto வெளியிட்ட அறிக்கையில், பர்தாசி பாராசூட்டை குறைந்த உயரத்தில் திறந்ததாகவும், அந்த நேரத்தில் ரிசர்வ் பாராசூட்டை திறப்பதற்குத் தேவையான நேரமும் உயரமும் இல்லாமல் விபத்துக்கு உள்ளானார். இந்த சம்பவத்தில் அபாயகரமான காயங்கள் ஏற்பட்டு அவர் இறந்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"Skydive Toronto Inc இல் உள்ள குழு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மாணவர் பயிற்சித் திட்டத்தைச் செம்மைப்படுத்தியதால், இந்த விபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பர்தாசி ஸ்கைடைவிங் சமூகத்தில் சமீபத்தில் தான் இணைந்தார். இந்நிலையில், அவரது புதிய நண்பர்கள் மற்றும் சக ஜம்பர்கள் மத்தியில் அவரது மரணம் சொகத்தடை ஏற்படுத்தயுள்ளது.