ஹமாஸ் தாக்குதலின்போது மாயமான கனேடிய இளம்பெண்: தற்போது வெளியாகியுள்ள துயரச் செய்தி
ஹமாஸ் தாக்குதலின்போது மாயமான கனேடிய இஸ்ரேலியரான இளம்பெண் ஒருவரை அவரது குடும்பத்தார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தற்போது அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
மாயமான இளம்பெண்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் Shir Georgy (22) என்னும் கனேடிய இஸ்ரேலிய இளம்பெண்.
அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், Georgy பாதுகாப்பாக இருப்பதாக முதலில் தகவல் கிடைத்துள்ளது.
மொன்றியலில் வளர்ந்தவரான Georgyயின் தாய், பின்னர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
கிடைத்துள்ள துயரச் செய்தி
Georgyயின் பெற்றோர் மருத்துவமனை மருத்துவமனையாக மகளைத் தேடிச் சென்றுள்ளனர். Georgyயின் DNAவைக் கொண்டு வருமாறு அதிகாரிகள் கோரியதையடுத்து, அவரது டூத்பிரஷுடன் அவர்கள் மகளைத் தேடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, கனடாவில் வாழும் Georgyயின் உறவினர்களை ஒரு துயரச் செய்தி வந்தெட்டியுள்ளது. ஆம், Georgy கொல்லப்பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |