மெக்சிகோ விடுதியில் அழுகிய நிலையில் கனேடியரின் சடலம்; அருகில் கதறி அழுதுக்கொண்டிருந்த 5 வயது மகன்...
மெக்சிகோவில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் அழுகிய நிலையில் கனேடிய நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உடலின் அருகே அவரது 5 வயது மகன் கதறி அழுதுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மெக்சிகோவின் ரிசார்ட் நகரமான புவேர்ட்டோ வல்லார்டாவிற்கு வடக்கே உள்ள விடுமுறை விடுதியில் ஐந்து வயது கனேடிய சிறுவன் தனது தந்தையின் அழுகிய உடல் அருகே அழுதுகொண்டிருந்தான்.
உயிரிழந்தவர் காண்டாவைச் சேர்ந்த 44 வயது John Poulson என்பது கண்டறியப்பட்டது.
கனடாவில் இருந்து ஜான் போல்சனின் முன்னாள் மனைவி, அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அவரது நண்பருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நயாரிட் மாநிலத்தில் உள்ள ஜார்ரேடாடெராஸில் உள்ள விடுதியில் பால்சன் இருப்பதாக கூறி அவரது பக்கத்து வீட்டுக்காரரை தொடர்பு கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.
அவரும், ஆகஸ்ட் 14 அன்று விடுதியில் சென்று பார்த்தபோது, 5 வயது சிறுவன் தனது தந்தையின் சடலத்தின் அருகே அழுதுகொண்டிருப்பதையும் அதிர்ச்சியில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சென்று பார்த்தபோது, விளக்குகள் அணைக்கப்பட்டு ஏர் கண்டிஷனிங் இயங்கும் படுக்கையறையில் பால்சனின் சடலமும், அருகில் 5 வயது மகன் உடலுக்குப் பக்கத்தில் அழுது கொண்டு படுத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், போல்சன் சிதைந்த நிலையில் இருந்ததாக தெரிவித்தனர்.
அக்கம்பக்கத்தினர் கூறுகையில், ஆகஸ்ட் 7-ஆம் திகதி முதல் அவரை காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
5 வயது சிறுவன், அவரது தாயார் கனடாவில் இருந்து மெக்சிகோவிற்கு வரும் வரை சிறுவர் பாதுகாப்பு சேவையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டதாக உடனடியாக எந்த சந்தேகமும் இல்லை என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், மெக்சிகோ முழுவதும் கிரிமினல் கும்பல்களின் வன்முறை அதிகரித்திருப்பதாக எச்சரிக்கை எழுந்ததையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை புதன்கிழமை மெக்சிகோவின் 31 மாநிலங்களில் ஆறு மாநிலங்களுக்கு "பயண வேண்டாம்" என்ற எச்சரிக்கையை விரிவுபடுத்தியது. மேலும், அமெரிக்கர்கள் மெக்ஸிகோவிற்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியது.