சுற்றுலா சென்ற கனேடிய பெண்ணுக்கு சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்
சுற்றுலா சென்றிருந்த கனேடிய பெண்ணொருவர், சுவிட்சர்லாந்தில் அபராதம் செலுத்த நேர்ந்ததால், வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சென்ற கனேடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்
கனேடிய குடிமகளான பூர்ணிமா தேவி (Poorneema Devi Bujun, 38) என்னும் பெண், ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மூன்று மாதங்கள் ஜேர்மனியில் தங்கியபின், மொரிஷியஸில் இருக்கும் தனது குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்ட அவர், சுவிட்சர்லாந்து வழியாக விமானத்தில் செல்ல முடிவு செய்துள்ளார்.
சூரிச் விமான நிலையம் வந்தடைந்த பூர்ணிமாவின் விசாவை சோதித்த அதிகாரிகள், அவரது ஷெங்கன் விசா காலாவதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். அதாவது, 90 நாட்கள் அவர் ஐரோப்பிய நாடுகளில் தங்கலாம் என்னும் நிலையில், அதை மூன்று மாதங்கள் என கணக்கிட்டிருந்த பூர்ணிமா, நடுவில் ஒரு மாதத்துக்கு 31 நாட்கள் இருப்பதை மறந்துவிட்டார்.
ஆகவே, நீங்கள் கூடுதலாக ஒரு நாள் தங்கிவிட்டீர்கள் என்று கூறி, சுவிஸ் அதிகாரிகள் பூர்ணிமாவுக்கு 350 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்துவிட்டார்கள்.
தான் தன் தவறை விளக்கியும், சரி ஏதோ ஒருமுறை கவனக்குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டது, அடுத்த முறை கவனமாக இருங்கள் என்று அவர்கள் கூறியிருக்கலாம் என்று கூறும் பூர்ணிமா, அவர்கள் நடந்துகொண்ட விதம், சுவிட்சர்லாந்து மீது கசப்பான எண்ணங்களை ஏற்படுத்திவிட்டது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |