ட்ரம்ப் ஆட்சிக்கு பிறகு கனேடியர்களின் வெளிநாட்டு பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, கனடியர்களின் அமெரிக்க பயணச் செலவு 3.3 பில்லியன் டொலர் குறைந்துள்ளது என Statistics Canada வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
2024-இல் 22.1 பில்லியன் டொலராக இருந்த அமெரிக்க பயணச் செலவு, 2025-இல் 18.8 பில்லியன் டொலராகக் குறைந்தது.
ஆனால், கனடியர்கள் பயணத்தை முற்றிலும் குறைக்கவில்லை, அதற்கு பதிலாக, அமெரிக்காவைத் தவிர்த்து பிற சர்வதேச இடங்களுக்கு அதிகம் சென்றுள்ளனர்.
2025-இல், அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாட்டு பயணச் செலவு 3.6 பில்லியன் டொலர் அதிகரித்து 22.8 பில்லியனாக உயர்ந்தது.
ஐரோப்பாவிற்கு கனடியர்களின் பயணம் 14 சதவீதம் அதிகரித்தது. ஆசியாவிற்கு 17 சதவீதம் அதிகரித்தது.

இது, ட்ரம்ப் அரசின் “America First” கொள்கைகள் மற்றும் கனடாவை இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கள் போன்றவற்றுக்கு எதிரான அமைதியான எதிர்வினையாக கருதப்படுகிறது.
2025-இல், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பிய பயணங்கள் வாகனங்களிலும் விமானங்களிலும் 25 சதவீதம் குறைந்தன. குறிப்பாக ஜூலை 2025-இல், எல்லை கடப்புகள் 33 சதவீதம் குறைந்தன. இது 1972-இல் டிஜிட்டல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு 2001 செப்டம்பர் மாதம் 9/11 தாக்குதலுக்குப் பிறகு மட்டுமே 30 சதவீம் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
2026-இல் இதுவரை கிடைத்த தரவுகளும், அமெரிக்காவிற்கு கனடியர்களின் பொழுதுபோக்கு பயணம் தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதை காட்டுகின்றன.
இந்த நிலைமை, அமெரிக்காவின் வணிக மற்றும் சுற்றுலா துறைக்கு பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |