கனேடிய விசா மோசடி: இந்தியர்கள் இருவருக்கு ஜாமீன் மறுப்பு
கனடா விசா மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு ஜாமீன் வழங்க இந்திய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது.
கனடா விசா மோசடி
இந்தியாவில், கனடா செல்வதற்கு விசா ஏற்பாடு செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய Mehul Bharwad என்பவரும் அவருடைய சக ஊழியர்கள் சிலரும் மோசடி செய்து 28 விண்ணப்பதாரர்களின் கைவிரல் ரேகை முதலான அடையாளங்களை பதிவு செய்து, போலியான விசா அப்பாயின்ட்மென்ட் கடிதங்களை அவர்களுக்கு வழங்கியது தொடர்பில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்டவர்களில் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கும் ஜாமீன் வழங்கக் கோரி Mehul Bharwad மற்றும் Harish Pandya என்னும் இரு ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், அரசு சட்டத்தரணி அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |