மருத்துவமனையின் அலட்சியம்... கொரோனா தடுப்பூசியால் படுத்த படுக்கையான கனேடிய பெண்மணி
கனடாவில் பெண்மணி ஒருவருக்கு அளவுக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், அவர் தற்போது படுத்த படுக்கையான சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவின் நார்த் யார்க் பொது மருத்துவமனையிலேயே குறிப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 95 வயதான பிரெண்டா வேலன் எனபவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்ச் மாத துவக்கத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு அங்கே கொரோனா தடுப்பூசி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரெண்டா வசித்துவரும் சுகாதார மையத்தில் அவருக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மகள் சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரெண்டா வேலன் எழுந்து நடமாட முடியாமல், சாப்பிடவோ பேசவோ முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். பிரெண்டாவுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசி எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் இதுவரை தெளிவாகவில்லை. மட்டுமின்றி, பிரெண்டாவின் தற்போதை முடக்க நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட மூன்றாவது டோஸ் தடுப்பூசியால் ஏற்பட்டதா என்பது தொடர்பிலும் விளக்கமில்லை.
கனடாவில் பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட நான்கு தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிரெண்டா விவகாரத்தில், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவரா அல்லது இரண்டாவது டோஸ் பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவமனை தரப்பு தெரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை என குற்றஞ்சாட்டும் சிந்தியா, ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கும் நிலையிலும் தமது தாயார் அப்போது இல்லை எனவும், மருத்துவமனை நர்சுகள் எவரும் அது தொடர்பில் விசாரிக்கவும் இல்லை என்கிறார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அறிகுறியற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, போராடி மீண்டவர் பிரெண்டா. தற்போது அதிக அளவிலான தடுப்பூசி அளிக்கப்பட்டு, பேச்சு மூச்சின்றி படுத்திருக்கிறார்.
மருத்துவர்களும் பிரெண்டாவின் நிலை குறித்து குழப்பத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் பிரெண்டாவை சுகாதார இல்லத்திற்கு மாற்றினால், அதிக கவனம் தேவைப்படும் என்பதால் மாதம் 8000 டொலர் அதிகமாக செலுத்த வேண்டிய கண்டாயத்தில் உள்ளார் மகள் சிந்தியா.
இந்த விவகாரம் தொடர்பில் யார்க் பொது மருத்துவமனை நிர்வாகம் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.