கர்ப்பிணியையும் கணவனையும் சுட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவான கனேடிய அழகி... எங்கு சிக்கினார் தெரியுமா?
சமூக ஊடக பிரபலமான கனேடிய அழகி ஒருவர், கர்ப்பிணிப்பெண் ஒருவரையும் அவரது கணவரையும் சுட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவானார்.
2020 பிப்ரவரி 28 அன்று மாலை, கனடாவின் ஹாமில்டன் நகரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் Tyler Pratt (39) என்பவர் கொல்லப்பட்டார்.
கர்ப்பிணியான அவரது காதலியின் வயிற்றில் குண்டு பாய்ந்ததில், அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனது.
துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியவர்கள் Oliver Karafa (28), மற்றும் அவரது காதலியான Yun 'Lucy' Lu Li (25) என்னும் சமூக ஊடக பிரபலமும், கனேடிய செல்வந்தரான ஒருவரின் மகளும் என பொலிசாருக்கு தெரியவந்தது.
ஆனால், பொலிசார் வருவதற்குள் தப்பிய Karafaவும் அவரது காதலியான Lu Liயும் அதற்குள் கனடாவிலிருந்து வெளியேறியிருந்தார்கள். 24 மணி நேரத்துக்குள் பல நாடுகளைக் கடந்து ஹங்கேரி தலைநகரான புதாபெஸ்டை அடைந்திருந்தார்கள் அவர்கள்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள். அவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் கனடாவுக்கு நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், சுடப்பட்டவர்களும் சுட்டவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று மட்டும் கூறியுள்ள பொலிசார், அவர்களுக்குள் என்ன உறவு என்பதைக் குறித்தோ, Tylerஐ சுட்டுக் கொன்றது யார் என்பதைக் குறித்தோ விவரங்களை வெளியிடவில்லை.