காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த கனேடிய பெண்: திருமணத்தை நிறுத்திய மணமகள்
Canadian Woman flies To India To Marry his dating app frnd: டேட்டிங் செயலி வழியாக காதலனை திருமணம் செய்து கொள்ள இந்தியா வந்த கனேடிய பெண் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
காதலனை திருமணம் செய்ய இந்தியா வந்த கனேடிய பெண்
ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் நிதின் என்பவரும் கனடாவை சேர்ந்த பெண் ஒருவரும் டேட்டிங் செயலி மூலமாக அறிமுகமாகி கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளனர்.
உரையாடல்கள் மூலம் நெருக்கமான நண்பர்களான இவர்கள் இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து சுற்றுலா விசா எடுத்து கடந்த நவம்பர் 11ம் திகதி அந்த கனேடிய பெண் இந்தியா வந்துள்ளார்.

நிதினும் அவரை டெல்லி விமான நிலையத்தில் வரவேற்று அவரது அத்தை மற்றும் மாமாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சுமார் இரண்டு நாட்களாக அந்த வீட்டில் தங்கி இருந்த இருவரும் அவர்களுடைய திருமணம் குறித்து விவாதித்துள்ளனர்.
விவாதத்தின் போது அந்த பெண்ணுக்கு 61 வயது என்பது தெரியவந்ததை அடுத்து நிலைமை தலைகீழாக மாறி நிதின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
காவல்துறை தலையீடு
தன்னுடைய திருமண கனவு திடீரென கலைந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த கனேடிய பெண் நவம்பர் 13ம் திகதி கனேடிய தூதரகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
தூதரக அதிகாரிகளும் உடனடியாக இதை உள்ளூர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
தற்போது நிதினை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கனேடிய பெண் கோட்புட்லியில் உள்ள கோ சென்டரில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.