கனடா வரும் இவர்களுக்கு பணி அனுமதி தேவை இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
கனடாவில் பணியாற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புத் தகுதிகள் தேவை.
நீங்கள் இணைந்துள்ள அணி கனடாவை மையமாகக் கொண்டதா அல்லது வெளிநாட்டை மையமாகக் கொண்டதா என்பதைப் பொறுத்து பணி அனுமதி விதிகள் அமையும்.
1. கனேடியரல்லாத ஒருவருக்காக பணியாற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களும் வெளிநாட்டவர்கள் என்றாலும், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின் விதிகளில் சில இவர்களுக்கு பொருந்தாது.
ஆகவே, இந்த விளையாட்டு வீரர்களும் அலுவலர்களும் வெளிநாட்டை மையமாகக் கொண்ட அணியின் உறுப்பினர்களாக அல்லது வேறொரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களாக இருக்கும் வரையில், அவர்களுக்கு பணி அனுமதி தேவையில்லை.
2. கனேடிய பணி வழங்குபவர் ஒருவரிடம் பணியில் சேரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வெளிநாட்டவர் ஒருவர், கனடாவை மையமாகக் கொண்ட அணியில் இணைய விரும்பினால், அல்லது கனடாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், பொதுவாக அவர்களுக்கு பணி அனுமதி தேவை.
ஆனாலும், அவர்கள் பணி அனுமதி பெறுவதற்கான தடைகள் பல நீக்கப்படும். அதாவது, அவர்கள் சற்று எளிதாகவே பணி அனுமதி பெற்றுக்கொள்ள முடியும். அதற்குக் காரணம் என்னவென்றால், இந்த வீரர்கள் தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு செய்யப்படுவதிலிருந்து விலக்குப் பெறமுடியும் என்பதுதான்.