ஸ்கேன் செய்யப்பட்டபின் சிறைக்கு அனுப்பப்பட்ட கனேடிய இளைஞன் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தெரியவந்த திடுக் உண்மை
கனடாவில் அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்திவந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சிறையிலடைக்கப்பட்டார்.
ஒன்ராறியோவைச் சேர்ந்த Jordan Sheard (26) என்ற அந்த இளைஞரை சிறைக்கு அனுப்பும் முன்னரும், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் பொலிசார் ஸ்கேன் செய்துள்ளார்கள்.
உடலுக்குள் அவர் போதைப்பொருள் உட்பட எதையாவது மறைத்து வைத்துள்ளாரா என்பதை அறிவதற்காக செய்யப்படும் ஸ்கேன் அது. ஸ்கேனில் அவரது உடலுக்குள் எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பின்னர், சிறைக்குள் Jordan இறந்துபோனார்.
பிரேத பரிசோதனையில், அவர் அதிக போதைப்பொருளால் உயிரிழந்ததாக தெரியவந்தது. ஆக, ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார், அப்போது ஸ்கேனில் எதும் இல்லை.
ஆனால், அவர் போதைப்பொருளால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
பிரேத பரிசோதனையில் Jordanஉடைய குடலுக்குள் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போதைப்பொருள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கவர் கிழிந்து போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இரத்தத்தில் கலந்ததாலேயே Jordan உயிரிழந்துள்ளார்.
ஆகவே, Jordanஇன் தாயார் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே Jordan சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் போதைப்பொருளால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுமானால், ஸ்கேனில் தவறு உள்ளது என்று பொருள் ஆகிறது. அது உண்மையா, அல்லது தன் மகனுடைய மரணத்துக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று கேட்கிறார் அவர்.
எனவே, தன் மகனுடைய மரணம் குறித்து விசாரணை செய்யுமாறு Jordanஇன் தாயார் கோரியுள்ளதையடுத்து விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.