யாழ் பல்கலைக்கழக முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் அழிப்பைக் கண்டித்து தமிழ் கனேடியர்கள் செய்துள்ள செயல்
யாழ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவிடம் இரவோடிரவாக அழிக்கப்பட்டதற்கு கனடாவாழ் தமிழர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிரேட்டர் ரொரன்றோ பகுதியில் வாழும் தமிழ் கனேடியர்கள், இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி ஒன்றை நடத்தினர்.
இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசி கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம்.
2019 ஆம் ஆண்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம், வெள்ளிக்கிழமை இரவு இலங்கை அதிகாரிகளால் அழிக்கப்பட்டது.
The Tamil Canadian car rally to condemn the destruction of the #Mullivaikkal memorial has commenced at Brampton City Hall. They will be driving to Toronto City Hall and Queen's Park to protest.
— Gurpreet Singh Dhillon (@gurpreetdhillon) January 10, 2021
I stand in solidarity with those in #Eelam who demand justice for the #TamilGenocide. pic.twitter.com/s3WFFnkRpI
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கார் பேரணி, பிராம்ப்டன் சிற்றி ஹாலில் தொடங்கி ரொரன்றோ சிற்றி ஹால் மற்றும் குயின்ஸ் பார்க் வரை சென்றது.
இந்த நடவடிக்கையை ’கட்டமைப்பு இனப்படுகொலை’ என்று விமர்சித்துள்ள பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன், தனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளார். கிரேட்டர் ரொரன்றோ பகுதியில் சுமார் 120,000 தமிழ் கனேடியர்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.
Destroying memorials of Tamils commemorating tens of thousands of Tamils killed in #Mullivaikkal is another form of stuctural genocide by #SriLanka. #Canada & the international community should act to stop this senseless destruction.@FP_Champagne @MichaelChongMP @JackHarrisNDP https://t.co/KwDVBNJ8Ym
— Patrick Brown (@patrickbrownont) January 8, 2021