உக்ரைனுக்கு ஆதரவாக ரொரன்றோவில் திரண்ட கனேடியர்கள்: ட்ரம்புக்கு ஒரு செய்தி
ரஷ்யா உக்ரைனை ஊடுருவி 3ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கனடாவின் ரொரன்றோவில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் திரண்டார்கள்.
உக்ரைனுக்கு ஆதரவாக ரொரன்றோவில் திரண்ட கனேடியர்கள்
நேற்று, அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமையன்று, நூற்றுக்கணக்கான கனேடியர்கள், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடி உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்ட மக்கள், உக்ரைன், ரஷ்யாவுடனான போரின் நான்காவது ஆண்டில் நுழைந்துள்ளது.
இனியும் அமெரிக்காவை நம்பியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதன் மூலம் டிரம்ப் வரலாற்றின் சரியான பக்கத்தில் இருக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், உக்ரைனின் கனிம வளத்தை அமெரிக்காவுக்கு பகிர்ந்தளிக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தம் விவாதத்தில் உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அது தொடர்பான ஒரு ஆரம்ப வரைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜெலென்ஸ்கி மறுத்துவிட்டார். அது உக்ரைனின் நலனுக்கு ஏற்றதல்ல என்று கூறி அவர் அந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |