கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்திய வம்சாவளியினருக்கு அனுமதி மறுத்த ட்ரூடோ கட்சி
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு ட்ரூடோவின் லேபர் கட்சி அனுமதி மறுத்துவிட்டதாக இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள செய்தி மக்களை கோபமடையச் செய்துள்ளது.
இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், திடீரென ஆர்யா சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மக்களை கோபமடையச் செய்துள்ளது.
First and foremost, I want to extend my heartfelt gratitude to the hundreds of volunteers across Canada who have worked tirelessly, day and night, over the past two weeks to mobilize support for my Liberal leadership campaign. Your unwavering dedication inspires me.
— Chandra Arya (@AryaCanada) January 26, 2025
I am deeply… https://t.co/EnR1u9ZFAt pic.twitter.com/F4Fk5sjDSl
ஆம், ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.
எதனால் ஆர்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகார்ப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், ஆர்யாவை போட்டியிட விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என கனேடிய மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
This is a normal process Chris, they have to apply to run for party leader, if they don't qualify then they are turned down. And if there are line ups for health care talk to your Conservative Premier. The Government is up and running just fine, perhaps politics isn't your forte? pic.twitter.com/BIjMnnCNDa
— milly (@milly72810023) January 26, 2025
நீங்கள் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடக்கூடாதென்றால், உங்களை எதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் அனுமதித்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர்.
So if you can’t run for leadership why are you allowed to be a MP ?
— Ennio Red (@EnioReda) January 26, 2025
மற்றொருவரோ, இவர்கள் தேர்ந்தெடுக்கவே படாத ஒரு வங்கியாளரை பிரதமருக்கான போட்டியில் அனுமதிப்பார்கள், ஆனால், அதே கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை அனுமதிக்கமாட்டார்களா என்று கேட்கிறார் ஒருவர்.
So a sitting MP that was duly elected can not run for the leadership of the Liberal Party but a guy that has never been elected by anyone and is obviously an elitist/globalist with no loyalty to Canadian Citizens can be basically appointed the leadership of the party and the… https://t.co/FW0bwo7bka
— David Mills (@DavidMills15) January 26, 2025
கனடா வரலாற்றிலேயே ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி என்றால் அது லிபரல் கட்சிதான் என்கிறார் இன்னொருவர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |