அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள்
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல, அது ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என கனேடியர்கள் கருதுவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா குறித்த தற்போதைய கருத்து
அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆய்வமைப்புகள் இரண்டு இணைந்து, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் அமெரிக்கா குறித்த ஆய்வொன்றை நடத்தின.

நேற்று அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில், 58 சதவிகித கனேடியர்கள், அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல என கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.
இதே கருத்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க மக்களிடையேயும் உள்ளது.
மேலும், 57 சதவிகிதம் பேர், ஆபத்து மற்றும் சவால்கள் எழும் நேரத்தில் அமெரிக்காவை நம்பமுடியாது என்றும் கூறியுள்ளார்கள்.

மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான கனேடியர்கள், அமெரிக்கா மற்ற நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதைவிட, பிரச்சினைகளை உருவாக்கத்தான் செய்கிறது என்று கூறியுள்ளார்கள்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டிவருவதுடன், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்த விடயம், அமெரிக்கா குறித்த கனேடியர்களின் எண்ணத்தை பெரும் அளவில் மாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |