காஸா பகுதியில் இருந்து கனேடிய மக்களுக்கு மகிழ்வான தகவல்: உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்
காஸா பகுதியில் சிக்கியுள்ள கனேடியர்கள் எகிப்து வழியாக சில நாட்களில் வெளியேறலாம் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
விரைவாக ஞாயிற்றுக்கிழமைக்குள்
காஸா பகுதியில் சிக்கியுள்ள கனேடிய மக்கள், மிக விரைவாக ஞாயிற்றுக்கிழமைக்குள் வெளியேற முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்னஞ்சல் ஒன்றும் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@afp
அதில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பயண ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய பொருட்களை அவர்களிடம் வைத்திருக்க வேண்டும், மேலும் தொடர்பு கொள்ளும்போது குறுகிய அறிவிப்பில் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஃபா எல்லை வழியாக 400 க்கும் மேற்பட்ட கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் காஸாவை விட்டு வெளியேற முடியும் என்று இதனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண நேரம் மிக விரைவில் தெரியப்படுத்தப்படும் எனவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரஃபா எல்லையில் தற்போதைய சூழல் கணிக்க முடியாததாக உள்ளது.
உங்கள் சொந்த செலவில்
இதனால் நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ரஃபா எல்லை ஊடாக பயணிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்போது, அபாயங்களை மதிப்பிடுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
@getty
மேலும், ரஃபா எல்லைக் கடவையில் யார் எகிப்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை கனடா முடிவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், காஸா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக கடப்பவர்களை 72 மணி நேரம் மட்டுமே தங்க எகிப்து நிர்வாகம் அனுமதிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கனேடிய அதிகாரிகள் தரப்பு பேருந்து மூலம் கெய்ரோவிற்கு உங்கள் அழைத்து செல்வார்கள் எனவும், அங்கிருந்து உங்கள் சொந்த செலவில் கனடாவிற்கு பயணத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |