பருவநிலையை கணிக்கும் விலங்கு ஒன்றைக் காண்பதற்காக காத்திருக்கும் கனேடியர்கள்: சுவாரஸ்ய பின்னணி
கனடாவில், Groundhog Day என்ற ஒரு நடைமுறை பிரபலமாக அனுசரிக்கப்படுகிறது.
Groundhog அல்லது நிலப்பன்றி என அழைக்கப்படும் விலங்கு ஒன்றின் நடவடிக்கைகளிலிருந்து, பருவநிலையை கணிப்பதற்காக ஏராளம் மக்கள் காத்திருக்கிறார்கள்.
பொதுவாக, மக்கள் கூட்டமாக கூடி அந்த நிலப்பன்றியின் நடவடிக்கையைக் காண்பதுண்டு. ஆனால், கொரோனா காரணமாக, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தவண்ணம் நேரலையில்தான் அதைக் காண இருக்கிறார்கள்.
அதாவது, இந்த நிலப்பன்றி, Groundhog தினத்தன்று, அதாவது இன்று (பிப்ரவரி 2), தனது வளையிலிருந்து வெளியேவருமாம். தனது குளிர்காலத் தூக்கத்திலிருந்து எழுந்து அது வெளியே வரும்போது, அது வந்து தனது நிழலைப் பார்க்குமானால், அதாவது, வெயில் இருக்குமானால், மீண்டும் அது தன் வளைக்குள்ளேயே சென்றுவிடுமாம். அப்போது, குளிர்காலம் இன்னமும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என மக்கள் அறிந்துகொள்வார்களாம். அதே நேரத்தில், அந்த நிலப்பன்றி மீண்டும் வளைக்குள் செல்லவில்லை என்றால், வசந்த காலம் சீக்கிரம் வர இருக்கிறது என்று அர்த்தமாம்.
Nova Scotiaவில், Shubenacadie Sam என்ற நிலப்பன்றியைக் காண மக்கள் தயாராக, ஒன்ராறியோவில் Wiarton Willie என்ற பழுப்பு நிற நிலப்பன்றியைக் காண மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
இந்த வித்தியாசமான வழக்கம் அமெரிக்காவிலும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.