பிரித்தானிய பயணம் குறித்து திட்டமிடும் கனேடியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரித்தானியாவுக்கு பயணிக்கும் கனேடியர்கள், பயண அனுமதி இல்லாமல் இனி பிரித்தானியாவுக்குள் சட்டப்படி நுழையமுடியாது.
கனேடியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரித்தானியாவுக்குப் பயணிக்கும் கனேடியர்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், Electronic Travel Authorization (ETA) என்னும் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்கவேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ETA என்னும் பயண அனுமதி பெறுவதற்கான கட்டணம் 30 கனேடிய டொலர்கள் ஆகும்.
இந்த பயண அனுமதியை, U.K. eTA app என்னும் ஆப் அல்லது ஒன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த விதி இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடியர்களுக்கு பொருந்தாது. அதாவது, கனேடிய, பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு வேறு விதி.
அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய, பிரித்தானிய பாஸ்போர்ட் அல்லது certificate of entitlement என்னும் ஆவணத்தை வைத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |