பயத்தை விட்டு போராடினால் புற்றுநோயை வெல்ல முடியும்: நடிகை கௌதமி பேச்சு
பயத்தை விட்டு விட்டு அதற்கு எதிராக போராடினால் புற்றுநோயை வெல்ல முடியும் என்று நடிகை கௌதமி பேசியுள்ளார்.
கௌதமி பேசியது
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், விசாகப்பட்டினம் கடற்கரையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. இதில் நடிகையும், லைப் அகெய்ன் அறக்கட்டளை நிறுவனருமான கௌதமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "புற்றுநோய் குறித்து மக்களிடைய தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. இதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் புற்றுநோய் குறித்த பயத்தை போக்க முடியும்.
பயத்தை விட்டு விட்டு அதற்கு எதிராக போராடினால் புற்றுநோயை வெல்ல முடியும். புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது தான் எனது லட்சியம்" என்றார்.
இந்த நடைபயண நிகழ்ச்சியில் இளம் சிவப்பு உடையில் கலந்து கொண்டனர். இதில், விசாகப்பட்டினம் மேயர் கோல காலி ஹரி வெங்கடகுமாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |