இளவரசர் வில்லியம் இயக்கிய அதே ஹெலிகொப்டரை இயக்கிய நபருக்கு புகையால் புற்றுநோய்: ராஜ குடும்பத்தினர் அச்சம்
ஏர் ஆம்புலன்ஸ் சாரதியாக பணியாற்றியபோது இளவரசர் வில்லியம் இயக்கிய அதே ஹெலிகொப்டரை இயக்கிய நபர் ஒருவருக்கு ஹெலிகொப்டர் புகையால் புற்றுநோய் ஏற்பட்டுள்ள விடயம் ராஜ குடும்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Zach Stubbings (42) என்னும் விமானப்படை வீரர் RAF Sea King என்னும் ஹெலிகொப்டரை 15 ஆண்டுகளாக இயக்கிவந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் உருவானது.
அந்த ஹெலிகொப்டரின் இயந்திரங்களிலிருந்து வெளியான புகையால்தான் அவருக்கு புற்றுநோய் உருவானது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த ஹெலிகொப்டர் புகையால்தான் Zachக்கு புற்றுநோய் வந்துள்ளது என்பதை நிரூபிக்க ஆறு ஆண்டுகளாக அவர் நீதிமன்றத்தில் போராடவேண்டியிருந்தது.
இந்நிலையில், Zachஇன் புற்றுநோய்க்கு தங்கள் நிறுவன ஹெலிகொப்டரின் புகைதான் காரணம் என அந்த ஹெலிகொப்டரை உருவாக்கிய MoD என்னும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே, Zachக்கு அந்நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளது.
இதற்கிடையில், Zach இயக்கிய அதே ஹெலிகொப்டரை இளவரசர் வில்லியம் மூன்று ஆண்டுகள் இயக்கியுள்ளார்.
அவர் 156 முறை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு 149 பேரை மீட்டுள்ளார். அவர் இயக்கிய அதே ஹெலிகொப்டரை இயக்கிய Zachக்கு இரு வகையான புற்றுநோய்கள் தாக்கியுள்ளதால், வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுக்கும் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமோ என ராஜ குடும்பத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.