இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் மரணங்கள்.., ICMR எச்சரிக்கை
இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது என்று ICMR எச்சரிக்கை விடுத்துள்ளது.
ICMR எச்சரிக்கை
இந்தியாவில் வரும் 2045 -ம் ஆண்டிற்குள் புற்றுநோய் மரணங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் (ICMR) எச்சரித்துள்ளது.
BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புற்றுநோய்க்கான தாக்கம் குறித்து ICMR கழகமானது ஆய்வு நடத்தியது. 5 ஓர் கொண்ட குழுவானது இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில், 2022 மற்றும் 2045 -க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 -ம் ஆண்டை விட புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாக ICMR தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக எச்சரித்துள்ளது.
அதாவது, அதிகமான புகையிலை பொருட்கள் உட்கொள்வதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான முதற்கட்ட காரணியாக சுகாதார காரணிகளை மேம்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |