மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்: முன்பே துல்லியமாக கணித்ததால் கவனம் ஈர்த்துள்ள ஜோதிடக் கலைஞர்
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பிரித்தானியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில், அவரைக் குறித்து முன்கூட்டியே துல்லியமாக கணித்த ஜோதிடக் கலைஞர் ஒருவர் கவனம் ஈர்த்துள்ளார்.
பிரான்ஸ் ஜோதிடக்கலைஞரின் கணிப்பு
பிரபல ஜோதிடக்கலை நிபுணரான நாஸ்ட்ரடாமஸ், 2024இல் பிரித்தானிய மன்னரான சார்லஸ் பதவியை இழப்பார் என்றும், ஹரி மன்னராவார் என்னும் பொருளிலும் கணித்துள்ளார் என செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
வாழும் நாஸ்ட்ரடாமஸ்
நாஸ்ட்ரடாமஸ் 16ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்தவர். ஆனால், தற்போது பிரேசிலில் வாழும் ஏதோஸ் (Athos Salomé) என்பவரும், எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் மற்றும் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்து கூறியதால் கவனம் ஈர்த்துவருகிறார். அதனால் மக்கள் அவரை வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கிறார்கள்.
(Image: Supplied)
அவ்வகையில், சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரகம், ஆசனவாய் மற்றும் இனப்பெருக்க அமைப்புகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கூறியிருந்தார் அவர்.
அத்துடன், மன்னர் சமாதானமாக ஆட்சி செய்யவேண்டுமானால், அவர் இப்போதே தன் உடல் நலம் மீது கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறியிருந்த ஏதோஸ், கவுண்ட் டவுன் தொடங்குகிறது, 2024க்கும் 2025க்கும் இடையில் சார்லஸ் மன்னர் பதவியில் நீடிப்பாரா என்பது நமக்குத் தெரியவரும் என்றும் கூறியிருந்தார்.
எச்சரிக்கை பலித்தது...
ஏதோஸ் எச்சரித்தது தற்போது அப்படியே பலித்துள்ளது. ஆம், ஏற்கனவே மன்னர் சார்லசுக்கு புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து அவர் அதற்காக சிகிச்சை பெற்றார்.
(Image: POOL/AFP via Getty Images)
தற்போது, மன்னருக்கு புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஏதோஸ், மன்னருடைய உடல் நலம் குறித்து சுமார் ஒன்பது மாதங்கள் முன்பே கணித்திருந்தார். ஆனால், தற்போதுதான் மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனால், மன்னருடைய உடல் நலம் குறித்து துல்லியமாக கணித்த ஏதோஸ் மக்கள் கவனம் ஈர்த்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |