VERNOLAC: புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்தி மருந்து
அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோய் என்கிறோம், தற்போதைய சூழலில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகம், காரணம் முற்றிய நிலையிலேயு பல புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றே.
புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்தி
உங்களுக்கு காணப்படும் அறிகுறிகளை பொறுத்து மருத்துவரிடம் முறையான பரிசோதனை மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து மீளலாம்.
இந்நோய்க்கான மருந்தை கண்டறியும் முயற்சியில் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் ஈடுபட்டுள்ளன.
இதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தின் IBMBB 14 வருடங்களுக்கும் மேலாக இது தொடர்பான பரிசோதனையை நடத்தியுள்ளது.
IBMBB நிறுவனத்தின் பேராசிரியர் சமிரா சமரகோனின் நீண்ட பரிசோதனைகளுக்கு பின்னர் VERNOLAC என்ற புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்திக்கான மருந்து அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இது முற்றிலும் தேசிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
VERNOLAC
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்காக எதிப்புச் சக்தியை வழங்கும் சிறந்த மருந்து VERNOLAC ஆகும்.
அதாவது ஸ்டெல் செல்களை இலக்கு வைத்து அழிக்க தயாரிக்கப்பட்டுள்ளது, இயற்கை பொருட்களை கொண்டு அதிநவீன அறிவியலை புகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக புற்றுநோயின் பக்கவிளைவுகளையும், சிகிச்சைகளையும் குறைக்கின்றது.