எனக்கு புற்றுநோய் உள்ளதை அம்மா, அப்பாவிடம் சொல்லாதீர்கள்! 6 வயது சிறுவன் மருத்துவரிடம் விடுத்த வேண்டுகோள்..வைரலாகும் உருக்கமான பதிவு
தனக்கு புற்றுநோய் இருப்பதை பெற்றோரிடம் கூற வேண்டாம் என மருத்துவரிடம் ஆறு வயது சிறுவன் வேண்டுகோள் விடுத்த விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
புற்றுநோய் பாதித்த சிறுவன்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நரம்பியல் நிபுணர் மருத்துவரான சுதிர் குமார் என்பவர் தன்னை பாதித்த சிறுவன் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டார். மனதை உருக்கும் வகையிலான அந்த ட்வீட்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மனு என்ற ஆறு வயது சிறுவனை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான்.
சிறுவனின் பெற்றோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மனுவிடம் கூற வேண்டாம் என மருத்துவரிடம் கோரியுள்ளனர். சக்கர நாற்காலியில் சிறுவனை சந்தித்த மருத்துவர் அவன் புன்னகையுடனும், நம்பிக்கையுடனும், புத்திசாலியாகவும் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
6-yr old to me: "Doctor, I have grade 4 cancer and will live only for 6 more months, don't tell my parents about this"
— Dr Sudhir Kumar MD DM?? (@hyderabaddoctor) January 4, 2023
1. It was another busy OPD, when a young couple walked in. They had a request "Manu is waiting outside. He has cancer, but we haven't disclosed that to him+
மருத்துவரின் பதிவு
மருத்துவர் தனது பதிவில், 'சிறுவனின் தரவுகள் மற்றும் மருத்துவப் பதிவுகளை மதிப்பாய்வு செய்ததில், மனுவுக்கு மூளையின் இடது பக்கத்தில் Glioblastoma multiforme grade 4 இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் காரணமாக அவருக்கு வலது கை மற்றும் கால் முடக்கம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கீமோதெரபி செய்யப்பட்டது. மூளை புற்றுநோய் காரணமாக வலிப்பு ஏற்பட்டது' என தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவரிடம் தனிமையில் பேசலாமா என சிறுவன் மனு பெற்றோரிடம் கேட்டுள்ளான்.
சிறுவனின் வேண்டுகோள்
அதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் பேசிய மனு, 'டாக்டர் iPad-யில் நோய் குறித்து அனைத்தையும் படித்தேன். மேலும் நான் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே வாழ்வேன் என்று எனக்கு தெரியும். ஆனால், இதை நான் என் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். தயவுசெய்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்' என கூறியுள்ளான்.
இதனால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், சில கணங்கள் தன்னால் பேச முடியவில்லை என்றும் மருத்துவர் குமார் ட்வீட்டில் எழுதியுள்ளார். சிறுவனிடம் வாக்கு கொடுத்த மருத்துவர், அவனின் பெற்றோரை தனியாக அழைத்து மனுவுடனான உரையாடலை பகிர்ந்து கொண்டார்.
மருத்துவரை மீண்டும் சந்தித்த பெற்றோர்
இந்த சம்பவம் நடந்து சுமார் 8 மாதங்கள் கழித்து மனுவின் பெற்றோர் மருத்துவர் சுதிர் குமாரை சந்தித்துள்ளனர். அப்போது சிறுவன் மனு குறித்து மருத்துவர் விசாரித்தார்.
அதற்கு மனுவின் பெற்றோர், 'டாக்டர், நாங்கள் உங்களை சந்தித்த பிறகு மனுவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அவர் டிஸ்னிலேண்டிற்கு செல்ல விரும்பினார்.
நாங்கள் அவருடன் சென்றோம். நாங்கள் வேலையில் இருந்து தற்காலிக விடுப்பு எடுத்து மனுவுடன் தரமான நேரத்தை செலவிட்டோம். ஒரு மாதத்திற்கு முன்பு அவரை இழந்தோம்.
அந்த சிறந்த 8 மாதங்களை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கவே இன்று வந்துள்ளோம்' என தெரிவித்துள்ளனர்.