மேக்ரான் மனைவி பெண் என நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை கோரும் அமெரிக்கப்பெண்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுடைய மனைவியான பிரிஜிட் ஆண் என கூறப்படும் விடயத்தில், அவரை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் பேசிவருகிறார் சம்பந்தப்பட்ட அமெரிக்கப்பெண்.
மேக்ரான் மனைவியை ஆண் என விமர்சிக்கும் பெண்
கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) என்னும் அமெரிக்கப் பெண், ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.
இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.
குறிப்பாக, பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர், அவர் ஒரு திருநங்கை என கேண்டேஸ் கூறுவதுண்டு. அதற்காகவே அவர் ’Becoming Brigitte’ என்னும் பெயரில் எட்டு பாகங்கள் கொண்ட போட்காஸ்ட் ஒன்றை நடத்தினார்.
அறிவியல்பூர்வ ஆதாரம் வெளியிடப்படும்
கேண்டேஸ் இப்படி சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டே இருக்கும் நிலையில், பிரிஜிட் பெண்தான் என்பதற்கான அறிவியல் பூர்வ ஆதாரத்தை வெளியிட மேக்ரான் தம்பதியர் திட்டமிட்டுள்ளதாக அவர்களுடைய சட்டத்தரணியான டாம் கிளேர் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேலும் அவமதிப்பு
இந்நிலையில், மீண்டும் பிரிஜிட் மேக்ரானை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார் கேண்டேஸ்.
இது ஒன்றும் பிரான்ஸ் அல்ல, இது அமெரிக்கா. மேக்ரான் தம்பதியர் நினைத்ததையெல்லாம் இங்கு செய்யமுடியாது என்று கூறியுள்ளார் கேண்டேஸ்.
அத்துடன், பிரிஜிட் பெண் என்பதை நிரூபிக்க, ஒரு தனி மருத்துவரை வைத்து, உடலுக்குள் கருவிகளை நுழைத்து செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும் என தான் கோர இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
விடயம் என்னவென்றால், கேண்டேஸ் கூறுவதுபோல, ஒருவரை பெண் என நிரூபிக்க, அவரது உடலுக்குள் கருவிகளை நுழைத்து செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |