இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்..உருக்கத்துடன் இரங்கல் பதிவிட்ட ட்ரூடோ
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்
காசாவில் திங்களன்று இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதில் World Central Kitchen-யின் ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் அமெரிக்க-கனடா நாட்டவர், ஒரு பாலஸ்தீனியர், மூன்று பிரித்தானியர்கள், ஒரு அவுஸ்திரேலியர் மற்றும் ஒரு போலந்து நாட்டவர் என தெரிய வந்துள்ளது.
இஸ்ரேல் தற்காப்புப் படைகளால் காசாவில் அமெரிக்க-கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
கொல்லப்பட்ட நபர் அமெரிக்க மற்றும் கனேடிய குடியுரிமை பெற்ற ஜேக்கப் ஃபிளிக்கிங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இராணுவத்தை விட்டு வெளியேறிய ஃபிளிக்கிங்கர்
ஏறக்குறைய ஒரு தசாப்தத்தை கனேடிய ஆயுதப் படைகளில் கழித்த 33 வயதான ஃபிளிக்கிங்கர், 2019ஆம் ஆண்டில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர் ஆவார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு காசா பகுதிக்கு உணவு விநியோகிக்க World Central Kitchen உடன் இணைந்த ஃபிளிக்கிங்கர், இந்த வார இறுதியில் வெளியேற திட்டமிட்டிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஃபிளிக்கிங்கரின் இறப்புக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
''உதவி வாகனம் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான கனேடிய குடிமகன் ஜேக்கப் ஃபிளிக்கிங்கரின் குடும்பத்துடன் எனது எண்ணங்கள் உள்ளன. தேவைப்படும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும்போது கொல்லப்பட்ட அவரது மரணம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
காசாவில் மனிதாபிமான உதவி மிகவும் அவசரமாக தேவைப்படும் நேரத்தில், உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உள்ளது. இந்த உலகம் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் இது எப்படி நடந்தது என்பதற்கான விளக்கத்திற்கு தகுதியானது'' என தெரிவித்துள்ளார்.
My thoughts are with the family of Jacob Flickinger, a Canadian citizen who was among those killed in an Israeli airstrike on an aid vehicle. Killed while delivering food to civilians in need, his death is absolutely unacceptable.
— Justin Trudeau (@JustinTrudeau) April 4, 2024
At a time when humanitarian aid is so urgently…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |