சுவிட்சர்லாந்தில் சிக்கிய எக்கச்சக்கமான கஞ்சா: தவிர்க்கப்பட்ட பெரும் குற்றச்செயல்
சுவிட்சர்லாந்தில் தொழில் முறை கஞ்சா தயாரிப்பவர்கள் போல, திட்டமிட்டு பெருமளவில் கஞ்சா செடிகள் வளர்த்த 12 பேர் சிக்கியுள்ளார்கள்.
Sankt Gallen மாகாணத்தில் பொலிசார் நடத்திய ரெய்டு ஒன்றில், சுமார் 9,000 கஞ்சா செடிகளும், 300 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது.
ஒரு வருடமாக, 12 பேர் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்து இந்த கஞ்சா செடிகளை வளர்த்துள்ளார்கள்.
இதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு ரெய்டில் 5,500 கஞ்சா செடி நாற்றுக்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் சிலர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது புலம்பெயர்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட உள்ளன.
இந்த அளவுக்கு எக்கச்சக்கமான கஞ்சா, சட்ட விரோதமாக இளைஞர்கள் கையில் சென்றடையுமானால், அது மிகப்பெரிய அளவுக்கு சமுதாயத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், பொலிசார் தலையீட்டால் கஞ்சா விற்பனையாளர்களின் திட்டம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கிறது.