ஜேர்மனியில் விரைவில் சட்டப்பூர்வமாகும் கஞ்சா: அமைச்சர் தகவல்
ஜேர்மனி விரைவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க இருப்பதாக ஜேர்மன் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் நிதியமைச்சரான Christian Lindner நேற்று வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், மக்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், எப்போது கஞ்சா சட்டப்பூர்வமாகும் என்பதுதான் அந்தக் கேள்வி: அந்தக் கேள்விக்கான பதில், சீக்கிரம் என்பதாகும், என்று தெரிவித்துள்ளார்.
புதிதாக ஜேர்மனியில் பதவியேற்றுள்ள கூட்டணி அரசின் கொள்கைகளில் ஒன்று, மக்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதாகும்.
மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சா பயன்படுத்துதல் ஏற்கனவே ஜேர்மனியில் சட்டப்பூர்வமானதுதான்.
ஆனால், இப்போது பொழுதுபோக்குக்காக கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட உள்ளது, ஜேர்மனியைப் பொருத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றமாக கருதப்படுகிறது.